தேசியம்
செய்திகள்

புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வாக்களித்த கல்வி தொழிலாளர்கள்

Ontario கல்வி ஆதரவு ஊழியர்கள் மாகாண அரசாங்கத்துடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்க வாக்களித்துள்ளனர்.

சுமார் 55,000 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய பொது ஊழியர் சங்கம் திங்கட்கிழமை (05) காலை இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தது.

சுமார் 73 சதவீத உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க வாக்களித்தனர் என Canadian Union of Public Employees (CUPE) அறிவித்தது.

இதன் மூலம் ஒரு நீண்ட சர்ச்சைக்குரிய பேச்சுவார்த்தை செயல்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ், அனைத்து தொழிலாளர்களும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு டொலர் ஊதிய உயர்வைப் பெறுவார்கள்.

இது ஆண்டுக்கு சுமார் 3.59 சதவீதம அதிகரிப்பாகும்.

தொழிற்சங்கத்தின் மிகக் குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்களுக்கு இது குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை வழங்கும் என அரசாங்கம் கூறியுள்ளது.

Related posts

ஆரம்பமானது 47வது Toronto சர்வதேச திரைப்பட விழா

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

கனடிய விமான நிலையங்களில் COVID கட்டுப்பாடுகள் இடை நிறுத்தம்

Leave a Comment

error: Alert: Content is protected !!