Kingsville நகர முதல்வர் பதவிக்கு தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார்.
Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (01) ஆரம்பித்தது.
பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி நடைபெறுகிறது.
இதில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முதலாவது நாளன்று தமிழரான ரொஷான் நல்லரட்னம் Kingsville நகர முதல்வர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இவர் முன்னர் அரசியல் பதவிகளுக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தவராவார்.
Ontario மாகாணத்தில் அமைந்துள்ள Kingsville கனடாவின் தென்கோடி நகரம் என பரவலாக அறியப்படுகிறது.
Kingsville நகர முதல்வராக Dennis Rogers பதவி வகிக்கிறார்.
19 ஆண்டுகளில் Kingsville நகரத்தின் முதல் புதிய நகர முதல்வராக 2022-ல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Dennis Rogers கடந்த தேர்தலில் 38 சதவீதமான வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
