தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமானது !

கனேடிய பொது தேர்தல் வாக்களிப்பு September 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை ஆளுநர் நாயகம் Mary Simon னை Rideau Hall லில் சந்தித்த பிரதமரும் Liberal கட்சியின் தலைவருமான Justin Trudeau 43 ஆவது நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு அழைப்பு விட கோரினார்.

இந்தக் கோரிக்கையை ஆளுநர் நாயகம் Simon ஏற்றுக் கொண்ட நிலையில் தேர்தல் பரப்புரை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. இதனால் 43 ஆவது கனேடிய நாடாளுமன்றம் கலைந்தது.

44 ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் (September) 20 ஆம் திகதி – திங்கட்கிழமை – நடைபெறவுள்ளது.

43 ஆவது நாடாளுமன்றத்தின் பதவி காலம் 2023 ஆம் ஆண்டு October மாதம் காலாவதியாக உள்ள நிலையில், முற்கூட்டிய தேர்தலுக்கான பிரதமரின் கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் 36 நாட்கள் நீடிக்க உள்ளது. கனேடிய தேர்தல் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட மிகக் குறுகிய கால தேர்தலுக்கான பிரசாரத்துக்குரிய நாட்கள் இவையாகும்.

ஆளுநர் நாயகத்துடனான சந்திப்பை தொடர்ந்து, Trudeau செய்தியாளர்களிடம் பேசினார். COVID தொற்றின் மத்தியில் ஒரு தேர்தலுக்கான காரணத்தை பிரதமர் நியாயப்படுத்த முயன்றார். ஏனைய கட்சித் தலைவர்கள் தங்கள் பிரச்சாரங்களை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தனர்.

Conservative தலைவர் Erin O’Toole, தனது பிரச்சாரத்தின் முதல் நாள் Ottawaவில் மெய்நிகர் நிகழ்வுகளில் பங்கேற்றார்.

COVID தொற்றுக்கு மத்தியில் ஒரு தேர்தல் மிகவும் பொறுப்பற்றது என Bloc Québécois தலைவர் Yves-Francois Blanchet தனது பிரச்சாரத்தை Montrealலில் ஆரம்பித்தபோது கூறினார்.

வாக்காளர்களுக்கு மிகவும் முற்போக்கான தேர்வாக தனது கட்சி அமையும் என NDPயின் தலைவர் Jagmeet Singh Montrealலில் தனது பிரச்சாரத்தின் ஆரம்பத்தில் கூறினார்.

பசுமை கட்சித் தலைவி Annamie Paul, தனது பிரசாரத்தை ஒரு மெய்நிகர் நிகழ்வாக Torontoவில் இருந்து ஆரம்பித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது கட்சிகள் கொண்டுள்ள ஆசனங்களின் எண்ணிக்கை

Liberal: 155
Conservative: 119
Bloc Québécois: 32
NDP: 24
Independent: 5
Green Party: 2

பெரும்பான்மை அரசாங்கத்திற்கு ஒரு கட்சி 170 இடங்களை வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .

Related posts

OPP படகுடன் மோதி பெண் மரணம்

Lankathas Pathmanathan

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்க பொது மக்கள் உதவியை நாடும் காவல்துறையினர்

Lankathas Pathmanathan

Liberal அரசாங்கத்தின் அமைச்சரவை சந்திப்பு ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment