தேசியம்
செய்திகள்

Billy Bishop விமான நிலைய விரிவுபடுத்தலுக்கு Pierre Poilievre ஆதரவு?

Toronto Billy Bishop விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான Ontario அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு Conservative கட்சித் தலைவர் ஆதரவு தெரிவித்தார்.

இது பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் எனவும், போட்டியை அதிகரிக்கும் எனவும் Pierre Poilievre கூறினார்.

நகரின் மையப் பகுதிக்கு Jet விமானங்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக, விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு, Pierre Poilievre 2022-ல் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

2015-ல் தங்களது பெரும்பான்மை அரசாங்கத்தை அமைத்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், மத்திய Liberal கட்சியினர் Billy Bishop விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டங்களை முடக்கினர்.

இது நடைபெற்று ஒரு தசாப்தத்திற்கு பின்னர், Doug Ford அரசாங்கம் ஒரு சட்ட முன்மொழிவை முன்வைத்துள்ளது.

இது Billy Bishop மையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள நிலங்களை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளவும், அந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் Toronto நகரத்திற்குப் பதிலாக மாகாணத்திற்கு அதிகாரம் அளிக்கவும் வழிவகுக்கிறது.

ஆனாலும் இந்த விடயத்தில் ஒருமித்த கருத்தின் அவசியத்தை மத்திய போக்குவரத்து அமைச்சர்  Steven MacKinnon வலியுறுத்தினார்.

இந்த விடயத்தில் Ontario மாகாண அரசின் நடவடிக்கையை Toronto நகரசபையும், மாகாண எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

“மாகாணம் நகர நிலத்தை ஒருதலைப்பட்சமாக எடுத்துக்கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல,” என Toronto நகர முதல்வர் Olivia Chow தெரிவித்திருந்தார்.

இந்த நடவடிக்கையை எதிர்த்து கடந்த மாதம் Olivia Chow ஒரு தீர்மானத்தை முன்வைத்தார்.

மேலும், இதனால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் சொத்துக்களை மாகாணம் கொள்வனவு செய்து கொண்டு அவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்தார்.

அதேவேளை Toronto மத்திய பகுதியை சேர்ந்த பல NDP மாகாணசபை உறுப்பினர்களும் இந்த விடயத்தில் தமது கவலைகளையும், எதிர்ப்பையும்  வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த விரிவாக்கத்தை கொண்டு மாகாண அரசாங்கமும் Billy Bishop விமான நிலையமும் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Jet விமானங்களை நிறுத்துவதற்கு புதிய ஓடுபாதை எவ்வளவு நீளமாக இருக்க வேண்டும் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் Prabmeet Sakaria பதிலளிக்கவில்லை.

இந்தப் பணி எப்போது முடிவடையும் என்பதற்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடிய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கி சட்டமூலம்

Lankathas Pathmanathan

மத்திய கிழக்கில் மோதலைத் தணிப்பது அவசியம்: Mark Carney!

Lankathas Pathmanathan

ஐந்து நாள் பயணமாக ஐரோப்பா சென்ற Justin Trudeau!

Lankathas Pathmanathan

Leave a Comment