தேசியம்
செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கனடாவின் புதிய தூதர் தேர்வு

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கனடாவின் புதிய தூதர் தேர்வு செய்யப்பட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கனடாவின் அடுத்த தூதராக Jonathan Wilkinson தேர்வு செய்யப்பட்டார்.

முன்னாள் Liberal அமைச்சர் Jonathan Wilkinson ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கனடாவின் அடுத்த தூதராக பணியாற்ற பிரதமர் Mark Carney தேர்ந்தெடுத்துள்ளார்.

Justin Trudeau அரசாங்கத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர், இயற்கை வளங்கள் அமைச்சர் போன்ற மூத்த அமைச்சரவை பதவிகளை Jonathan Wilkinson  வகித்தார்,

ஆனால் கடந்த ஆண்டு தேர்தலைத் தொடர்ந்து Mark Carney அமைச்சரவையில் அவர் நியமிக்கப்படவில்லை.

கடந்த நான்கு தேர்தலிகளில் தனது வடக்கு Vancouver-Capilano தொகுதியை Liberal கட்சி சார்பில் Jonathan Wilkinson வெற்றி பெற்று வந்தார்.

அவரது நியமனம் இந்தத் தொகுதியில் ஒரு இடைத்தேர்தலுக்கு வழிவகுக்கும்.

எதிர்வரும் மாதங்களில்  தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக  Jonathan Wilkinson ஒரு  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது பதவி விலகல் Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 173 -ஆக குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario மாகாண பற்றாக்குறை இரட்டிப்பானது

Lankathas Pathmanathan

உலகின் மோசமான தாமதங்களை எதிர்கொண்ட விமான நிலையங்களின் பட்டியலில் Toronto Pearson முதலாம் இடத்தில்

Lankathas Pathmanathan

கனடா – Mexico இடையே மூலோபாய கூட்டு ஒப்பந்தம்?

Lankathas Pathmanathan

Leave a Comment