தேசியம்
செய்திகள்

மீண்டும் மூன்று இடைத்தேர்தல்?

மூன்று தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல்கள் நடைபெறும் சாத்தியக்கூறு தோன்றுகிறது.

மூன்று மத்திய தேர்தல் தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் நிலை சாத்தியமாகிறது.

British Colombia மாகாணத்தின் வடக்கு Vancouver-Capilano, Ontario மாகாணத்தின் Beaches–East York, Quebec மாகாணத்தின் Rosemont-La Petite-Patrie தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல்கள் நடைபெறும் சாத்தியக்கூறு தோன்றுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கனடாவின் அடுத்த தூதராக Jonathan Wilkinson தேர்வு செய்யப்பட்டது அவரது வடக்கு Vancouver-Capilano தொகுதியில் ஒரு இடைத்தேர்தலுக்கு வழிவகுக்கிறது.

எதிர்வரும் மாதங்களில் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக  Jonathan Wilkinson ஒரு  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Jonathan Wilkinson இந்தக் கோடையில் தனது புதிய பதவியை ஏற்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவரது பதவி விலகல் Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 173 ஆக குறைக்கும்.

அதேவேளை மாகாண அரசியலில் கவனம் செலுத்துவதற்காக இந்த கோடையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக உள்ளதாக Toronto நகர, (Beaches–East York) Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Nate Erskine-Smith தெரிவித்துள்ளார்.

இதனால் Liberal கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 172 ஆக குறையும் நிலை உள்ளது.
இந்த 172 பேரில் சபாநாயகரும் அடங்குகிறார்.

மரபுப்படி, வாக்குகள் சமநிலையில் இருந்தாலன்றி சபாநாயகர் வாக்களிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Jonathan Wilkinson, Nate Erskine-Smith ஆகியோரின் பதவி விலகலால், எதிர்க்கட்சியின் 172 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு எதிராக Liberal கட்சியால் 171 வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே திரட்ட முடியும் நிலை தோன்றும்.

NDP குழுவில் இருந்து விலகி தற்போது சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள Montréal (Rosemont-La Petite-Patrie) நாடாளுமன்ற உறுப்பினர் Alexandre Boulerice, மாகாண அரசியலுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளார்.

இதன் மூலம் எதிர்க்கட்சியின் மொத்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 171 ஆக குறையும்.

இருப்பினும், June மாதத்தில் கோடை விடுமுறைக்காக சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகி, September மாதம் சபை மீண்டும் கூடுவதற்கு முன்னர் பிரதமர் Mark Carney இந்த மூன்று தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்களை அறிவிக்கும் சாத்தியம் உள்ளது.

இந்த மூன்று இடைத்தேர்தல்களில் குறைந்தது இரண்டிலாவது Liberal கட்சி வெற்றி பெற்றால், நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .

Related posts

Paris Paralympics: இரண்டாவது நாள் மேலும் இரண்டு பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Vancouver தீவின் வட கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம்

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: நான்காவது வெள்ளி பதக்கத்தை வெற்றி பெற்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment