September 27, 2026
தேசியம்
செய்திகள்

நகரசபை பதவிகளுக்கான வேட்பாளர் பதிவு ஆரம்பம்

Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்பாளர் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (01) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.

பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது.

வெள்ளி காலை ஆரம்பித்த இந்தப் பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்புமனு தாக்கல் August 21 வரை நீடிக்கிறது.

இந்தத் தேர்தலில் மாகாண வாக்காளர்கள் அனைத்து நகராட்சிகளிலும் நகர முதல்வர்கள், நகரசபை உறுப்பினர்கள், கல்விச் சபை உறுப்பினர்கள் உட்பட ஏனைய  அதிகாரிகளை தேர்ந்தெடுப்பார்கள்.

இந்தத் தேர்தலில் பல தமிழர்கள் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2010-ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஒரே ஆண்டில் மாகாண சபைத் தேர்தலும்  நகரசபைத் தேர்தலும் நடைபெறாமல் இருக்கும் முதல் வருடம் இதுவாகும்.

Related posts

Niagara காவல்துறை அதிகாரி துப்பாக்கி சூட்டில் காயம்

Lankathas Pathmanathan

சீனாவிலிருந்து வரும் பயணிகள் மீதான தடை ஏற்றுக்கொள்ள முடியாதது!

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் பொதுத் துறை பணியாளர்கள் பற்றாக்குறை

Lankathas Pathmanathan

Leave a Comment