September 9, 2026
தேசியம்
செய்திகள்

Fairview வணிக வளாக பாதுகாப்பு ஊழியர் மீது துப்பாக்கி சூடு

Fairview வணிக வளாக நகைக்கடையின் பாதுகாப்பு ஊழியர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரை எதிர்கொண்டபோது இந்த பாதுகாப்பு ஊழியர் சுடப்பட்டதாக தெரியவருகிறது.

செவ்வாய்க்கிழமை (21) காலை North York நகர வணிக வளாகம் ஒன்றில் உள்ள நகைக்கடையை கொள்ளையடிக்க முயன்ற சந்தேக நபரை எதிர்கொண்டபோது, பாதுகாப்பு ஊழியர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளானதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Sheppard Avenue – Don Mills Road அருகே அமைந்துள்ள Fairview வணிக வளாகத்தில், காலை 10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தது.

இந்தச் சம்பவம் குறித்து Toronto காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

வணிக வளாகம் ஒன்றிற்குள் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான ஒருவர் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து தமது விசாரணை ஆரம்பித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Michael Hill  நகை கடையின் வெளியில் காயமடைந்தவர் கண்டெடுக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தெரியவருகிறது.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்பே சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

Related posts

Rainbow பால வாகன வெடிப்பு சம்பவத்துடன் பயங்கரவாதம் தொடர்பு பட்டடத்திற்கான ஆதாரம் இல்லை: கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan

கண்டறிதல் கோட்பாட்டை இரத்து செய்யுமாறு திருத்தந்தையிடம் வலியுறுத்தல்

அமெரிக்க Open அரையிறுதிக்கு முன்னேறிய கனேடிய tennis வீராங்கனை!

Gaya Raja

Leave a Comment