தேசியம்
செய்திகள்

John Toryயின் பதவி விலகல் முடிவை மறுபரிசீலீக்க கோரிக்கை

Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நகர சபையின் பல உறுப்பினர்கள் John Toryயிடம் கோரி வருகின்றனர்.

Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வெள்ளிக்கிழமை (10) John Tory அறிவித்திருந்தார்.

COVID தொற்று காலத்தில் தனது அலுவலக ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை ஏற்றுக் கொண்ட பின்னர் நகர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக John Tory அறிவித்தார்.

ஆனாலும் பல நகரசபை உறுப்பினர்கள் John Tory தொடர்ந்தும் நகர முதல்வர் பதவியில் நீடிப்பதற்கு ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனாலும் இந்த கோரிக்கை குறித்து John Tory பதில் எதனையும் வழங்கவில்லை என இந்த சந்திப்பில் கலந்து கொண்ட நகரசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

புதன்கிழமை (15) நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்ட விவாதங்கள் வரை தனது பதவியில் தொடர்ந்திருக்க John Tory முடிவு செய்துள்ளதாக நேற்று அவரது அலுவலகம் அறிவித்திருந்தது.

அதேவேளை John Tory பதவி விலக வேண்டும் என தாங்கள் நம்பவில்லை என கருத்து கண்கணிப்பொன்றில் பங்கேற்ற 45 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

Related posts

கனடாவின் முதலாவது சுதேச ஆளுநர் நாயகம் பதவியேற்றார்!

Gaya Raja

வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய முதலாவது தடுப்பூசி Pfizerரின் ஆகலாம்: கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர்

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!