தேசியம்
செய்திகள்

கடந்த ஆண்டு Ontario வீதிகளில் 350க்கும் அதிகமான மரணங்கள்

கடந்த ஆண்டு Ontario வீதி விபத்துகளில் 350க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன.

Ontario மாகாண காவல்துறையினர் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் 359 பேர் வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

இது முந்தைய ஆண்டை விட 44 அதிக இறப்புகளாகும்.

வேகம், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், மது அல்லது போதைப் பொருள் பாவனை, இருக்கை பட்டைகள் இல்லாதது ஆகியவை இந்த இறப்புகளுக்கான  அதிக காரணிகளாகும்.

வேகம் காரணமான விபத்துகளில் 2022 இல் 85 பேர் கொல்லப்பட்டனர்.

64 பேர் மது அல்லது போதைப்பொருள் தொடர்பான விபத்துகளின் விளைவாக இறந்தனர்.

2021ஆம் ஆண்டை விட 2022 இல் 13 ஆயிரத்து 514 அதிக விபத்துகள் பதிவானதாக OPP குறிப்பிட்டது.

2022இல் Ontario வீதிகளில் 29 பாதசாரிகளும் உயிரிழந்துள்ளனர்.

இது 2021 இல் பதிவு செய்யப்பட்ட 40 பாதசாரிகளில் இறப்புகளை விட குறைவானதாகும்.

Related posts

கனடாவின் அரச தலைவரின் மறைவுக்கு தொடரும் அஞ்சலி

Lankathas Pathmanathan

Mississauga நகர பொது பேருந்து விபத்தில் 12 பேர் காயம்!

Lankathas Pathmanathan

Manitoba நெடுஞ்சாலை விபத்தில் 15 பேர் பலி! – 10 பேர் காயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment