தேசியம்
செய்திகள்

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

பயங்கரவாத அமைப்பிற்கான ஆட்சேர்ப்பு வீடியோக்களை தயாரித்ததாக கூறப்படும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

RCMP முன்னெடுத்த 18 மாத விசாரணையின் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது Ontario மாகாணத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

RCMPயின் ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமுலாக்க குழு Niagara, Toronto பிராந்தியத்தில் இந்த கைதுகளை மேற்கொண்டது.

இவர்கள் Atomwaffen பிரிவு (Atomwaffen Division – AWD), என்ற அமைப்புக்கு ஆட்சேர்ப்பு வீடியோக்களை தயாரிப்பதாக கூறப்படுகிறது.

இந்த அமைப்பு, “சர்வதேச neo-Nazi குழு” என காவல்துறை கூறுகிறது.

AWD கனடிய அரசாங்கத்தால் 2021ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் விபரங்களை காவல்துறையினர் பகிரங்கமாக வெளியிடவில்லை.

இதில் ஒருவர் எட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

மற்றொரு நபர் மீது ஒரு குற்றச்சாட்டு பதிவானது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் AWD தொடர்புடைய பிரச்சாரங்களை தயாரித்ததாக RCMP ஒருவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

தீவிர வலதுசாரி பிரச்சாரத்துடன் தொடர்புடைய பயங்கரவாத குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் கனடியர் இவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

Donald Trump பதவியேற்பு: அமெரிக்காவில் கனடிய அரசியல் தலைவர்கள்

Lankathas Pathmanathan

B.C. காட்டுத்தீ தொடர்பான பயணக் கட்டுப்பாடு நீக்கம்

Lankathas Pathmanathan

தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தை மாற்றும் Ontario!

Lankathas Pathmanathan

Leave a Comment