கனேடியர்களில் 9 பேரில் ஒருவருக்கு COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது.
வெள்ளிக்கிழமை வெளியான அறிக்கையின் பிரகாரம் 3.5 மில்லியன் கனடியர்கள் COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகளை எதிர்கொள்கின்றனர்.
COVID நோய்த் தொற்றுக்குப் பின்னர் மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் அறிகுறிகள் நீடித்தால் அது நோய்த் தொற்றின் நீண்டகால அறிகுறியாக வரையறுக்கப்படுகிறது
நீண்ட கால நோய்த் தொற்றின் அறிகுறிகளை கொண்டவர்களில், 80 சதவீதம் பேர் ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக அவற்றைக் கொண்டுள்ளனர்.