தேசியம்
செய்திகள்

சர்வதேச மாணவர் மோசடி திட்டங்களை கட்டுப்படுத்த புதிய விதிகள்

சர்வதேச மாணவர் மோசடி திட்டங்களை கட்டுப்படுத்த கனேடிய  குடிவரவு அமைச்சர் புதிய விதிகளை அறிவித்துள்ளார்.

சர்வதேச மாணவர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் புதிய விதிகளை குடிவரவு அமைச்சர் Marc Miller வெள்ளிக்கிழமை (27) அறிவித்துள்ளார்.

கடந்த கோடை காலத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களும் போலி கடிதங்கள் வழங்கப்பட்டது தொடர்பான விசாரணையை தொடர்ந்து இந்த அறிவித்தல் வெளியானது.

2017ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டத்தை விசாரிக்க குடிவரவுத் துறை June மாதம் ஒரு பணிக்குழுவை அமர்த்தியது.

சர்வதேச மாணவர்களை கனடாவுக்கு அழைத்து வருவதற்காக குடிவரவு முகவர்கள் போலி  கடிதங்களை வழங்குவது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த விசாரணை ஆரம்பமானது.

இதுவரை மதிப்பாய்வு செய்யப்பட்ட 103 வழக்குகளில், சுமார் 40 சதவீத மாணவர்கள் இந்த போலி கடிதங்கள் குறித்து அறிந்துள்ளதாக தெரியவருகிறது.

மீதமுள்ள மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரியவருகிறது.

இந்த நிலையில் சர்வதேச மாணவர்களை ஏற்றுக்கொள்ளும் பாடசாலைகள் ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் December 1 முதல் குடிவரவுத் துறையுடன் உறுதிப்படுத்த வேண்டும் என அமைச்சர்  Marc Miller கூறினார்.

Related posts

நாடளாவிய ரீதியில் 1,725 தொற்றுக்கள்!

Gaya Raja

ஏழு உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட தாக்குதல் குறித்த இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

British Colombia தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment