தேசியம்
செய்திகள்

இஸ்ரேல்-காசா போரில் ஏழு கனடியர்கள் மரணம்

ஏழாவது கனடியரின் மரணம் இஸ்ரேல்-காசா போரில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏழாவது கனேடியர் மரணத்தை கனடிய அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை (26) உறுதிப்படுத்தியுள்ளனர்.

போரில் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட இந்த கனடியர் அதிகாரிகளினால் அடையாளம் காணப்படவில்லை.

இதுவரை 22 வயதான Shir Georgy, 22 வயதான Ben Mizrachi, 21 வயதான Netta Epstein, 23 வயதான Tiferet Lapidot, 33 வயதான Alexandre Look, 33 வயதான Adi Vital-Kaploun ஆகிய கனடியர்களின் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு கனடியர்கள் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு வியாழனன்று தெரிவித்தது.

இஸ்ரேலில் தற்போது 5,765 கனடியர்கள் உள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு கூறியது.

காசாவிலும் West Bank பகுதியிலும் 451 கனடியர்கள் உள்ளனர்.

தவிரவும் 17,135 கனடியர்கள் லெபனானில் உள்ளதாக பதிவாகியுள்ளது.

Related posts

தமிழ் சமூக மையம் குறித்த பொதுக்கூட்டம்

Lankathas Pathmanathan

திங்களன்று Liberal தலைமை வேட்பாளர்களின் முதலாவது விவாதம்

Lankathas Pathmanathan

Toronto பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை: பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment