September 30, 2026
தேசியம்
செய்திகள்

புதிய கனடா-அமெரிக்க வர்த்தக ஆலோசனைக் குழு அறிவிப்பு

புதிய கனடா-அமெரிக்க வர்த்தக ஆலோசனைக் குழுவை கனடிய பிரதமர் அறிவித்தார்.

இந்த ஆலோசனைக் குழுவில், முன்னாள் முதல்வர்களும் முன்னாள் Conservative கட்சித் தலைவர் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த கோடையில் நடைபெறவுள்ள CUSMA மறுஆய்வு செயல்முறைக்கு முன்னதாக, பிரதமர் Mark Carney ஒரு புதிய கனடா-அமெரிக்க ஆலோசனைக் குழுவை செவ்வாய்கிழமை (21) அறிமுகப்படுத்தியுள்ளார்.

முந்தைய ஆலோசனைக் குழுவின் சில உறுப்பினர்களுடன், முன்னாள் Conservative தலைவர் Erin O’Toole, முன்னாள் Conservative அமைச்சர் Lisa Raitt, முன்னாள் முதல்வர்கள்  P.J. Akeeagok, Jean Charest, இங்கிலாந்துக்கான முன்னாள் கனடிய உயர் ஆணையர் Ralph Goodale ஆகியோர் இந்த புதிய குழுவில் இடம்பிடித்துள்ளனர்.

 

தவிரவும் தொழிற்சங்க இயக்க தலைவர்கள், தொழில்துறை வல்லுநர்கள், நிதித்துறை, பொருளாதார துறைகளில் உள்ள தலைமை செயல் அதிகாரிகள் பன்முகத்தன்மை வாய்ந்த இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

இந்த புதிய ஆலோசனைக் குழுவுக்கு கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc தலைமை தாங்குவார்.

கனடா-அமெரிக்கப் பொருளாதார உறவின் அனைத்து அம்சங்கள் குறித்த நிபுணத்துவம், உத்திகளுக்கான ஒரு மன்றமாக இந்தக் குழு செயல்படும் என் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

2025-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் Justin Trudeau அமைத்திருந்த வர்த்தக ஆலோசனை குழுவுக்கு பதிலாக இந்த புதிய குழு செயல்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Ontario மாகாணத்தில் முடிவுக்கு வரும் கல்வி ஊழியர்களின் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

சீன மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க வேண்டும்: Ontario முதல்வர் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment