September 30, 2026
தேசியம்
செய்திகள்

விமானச் சேவைகளின் எண்ணிக்கையைக் குறைக்க WestJet முடிவு

தனது விமானச் சேவைகளின் எண்ணிக்கையைக் குறைக்க WestJet விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஈரான் போரின் காரணமாக விமான எரிபொருளின் விலை அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவை WestJet எடுத்துள்ளது.

April மாதத்தில் தனது விமானச் சேவையை சுமார் ஒரு சதவிகிதமும், May மாதத்தில் மூன்று சதவிகிதமும், June மாதத்தில் கிட்டத்தட்ட ஆறு சதவிகிதமும் குறைத்துள்ளதாக WestJet தெரிவித்துள்ளது.

இதுவரை எந்த பயணங்களையும் நீக்கவில்லை எனக் கூறும் WestJet, சாத்தியமான சேவை குறைப்புகளை கருத்தில் கொண்டு தனது கோடை கால அட்டவணையை மறு மதிப்பீடு செய்து வருவதாக தெரிவிக்கிறது.

Air Canada சில நகரங்களுக்கான விமான சேவைகளை இடைநிறுத்துவதாக கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் அதிகரிக்கும் வட்டி  விகிதம்?

Lankathas Pathmanathan

Scarborough-வில் தமிழ் இனப்படுகொலை நினைவகம் அமைப்பது குறித்து Patrick Brown – பார்த்தி கந்தவேள் கலந்துரையாடல்!

Lankathas Pathmanathan

கனடாவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment