தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் தேர்தலில் இருந்து மேலும் ஒருவர் விலகல்?

Toronto நகர முதல்வர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் ஊடகவியலாளர் Anthony Furey அறிவித்தார்.

சமூக ஊடகப் பதிவு ஒன்றில் இந்த அறிவிப்பை அவர் திங்கட்கிழமை (21) வெளியிட்டார்.

2023-ஆம் ஆண்டு நகர முதல்வர் பதவிக்கான இடைத் தேர்தலில் நான்காவது இடத்தைப் பிடித்த முன்னாள் பத்திரிகையாளரான இவர் மீண்டும் இம்முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இவரது அறிவித்தல், முன்னாள் நகர முதல்வர் John Tory, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினர் Michael Ford ஆகியோரும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்ததைத் தொடர்ந்து வெளியானது.

நகரசபைத் தேர்தல் October மாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் வேட்பாளர்களுக்கான அதிகாரப்பூர்வ வேட்புமனு தாக்கல் காலம் May 1 அன்று ஆரம்பமாகி August 21 அன்று முடிவடைகிறது.

இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து போதிலும், இறுதியில் இது போட்டியிடுவதற்கான சரியான நேரம் அல்ல என முடிவு செய்ததாக Anthony Furey  தனது பதிவில் குறிப்பிட்டார்.

கடந்த தேர்தலில் அவர் 35,899 வாக்குகளை பெற்றிருந்தார்.

Beaches-East York நகரசபை உறுப்பினரான Brad Bradford, முதல்வர் பதவிக்காக போட்டியிடப் போவதாக கடந்த வருடம் அறிவித்திருந்தார்.

நகர முதல்வர் Olivia Chow  மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் இப்போட்டியில் களமிறங்குவதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Related posts

COVID மரணங்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan

Newfoundland and Labrador அமைச்சர் மரணம்

Lankathas Pathmanathan

உக்ரைனை விட்டு இராஜதந்திரிகளின் குடும்பத்தினர் வெளியேற வேண்டும்: கனடா உத்தரவு

Lankathas Pathmanathan

Leave a Comment