தேசியம்
செய்திகள்

அரசியல் பாகுபாடு: அமெரிக்காவில் வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கியதாக கனடாவின் வங்கிகள் மீது குற்றச்சாட்டு!

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட வங்கிப் பாரபட்சம், கணக்கு முடக்கம் குறித்த நாடாளுமன்றப் புலனாய்வு அறிக்கையில் கனடாவின் முன்னணி வங்கிகள் பெயரிடப்பட்டுள்ளன.

கனடாவின் முன்னணி வங்கிகள் TD, BMO ஆகியன அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளன

போதிய நியாயமான காரணங்களின்றி நுகர்வோரின் கணக்குகளைத் தன்னிச்சையாக முடக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒன்பது முக்கிய சர்வதேச நிதி நிறுவனங்களின் பட்டியலில் இரண்டு கனடிய வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது.

கனடாவின் முன்னணி வங்கிகளான TD Bank.,BMO உட்பட 9 பெரிய சர்வதேச வங்கிகள், தங்களின் வாடிக்கையாளர்களை அவர்களின் அரசியல், மதக் கொள்கைகளின் அடிப்படையில் பாகுபாட்டுடன் நடத்தியதாகவும், அவர்களின் கணக்குகளை முடக்கியதாகவும் அமெரிக்காவின் முதன்மை வங்கி ஒழுங்குமுறை ஆணையம் அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் Currency கட்டுப்பாட்டு அலுவலகம் (OCC – Office of the Comptroller of the Currency) புதன்கிழமை (14) வெளியிட்டுள்ள 47 பக்க விரிவான விசாரணை அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு August மாதத்தில், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump பிறப்பித்த அவசர நிர்வாக உத்தரவின் அடிப்படையில் இந்த சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

அமெரிக்க குடிமக்களின் மத அல்லது அரசியல் நம்பிக்கைகளுக்காக அவர்களின் நிதிச் சேவைகளும், வங்கிக் கணக்குகளும் மறுக்கப்படக் கூடாது என அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

இந்தக் கடுமையான குற்றச்சாட்டு குறித்து TD வங்கி உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

BMO  வங்கி இது குறித்து நேரடியாகப் பதிலளிக்காமல், அமெரிக்க வங்கியியல் கொள்கை நிறுவனத்தின் கூட்டு அறிக்கையைச் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

Ontario முதல் குடியினர் பாடசாலை ஆய்வுத் திட்ட நிதி உதவி குறைகிறது?

Lankathas Pathmanathan

ஒரு மாதத்தை அண்மிக்கும் Canada Post வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

தற்காலிக உடன்பாட்டை எட்டியது LCBO – வேலை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது?

Lankathas Pathmanathan

Leave a Comment