தேசியம்
செய்திகள்

யூதர்களை இலக்கு வைத்த நான்கு தீவிரவாத தாக்குதல்கள் முறியடிப்பு?

கனடாவில் யூதர்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தத் தீட்டப்பட்ட நான்கு தீவிரவாத சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

2023 Israel-Hamas மோதல் ஆரம்பித்ததிலிருந்து, யூதர்களை இலக்காகக் கொண்ட நான்கு “வன்முறை தீவிரவாதத் தாக்குதல் சதித்திட்டங்களை” கனடிய அதிகாரிகள் முறியடித்துள்ளதாக உளவுத்துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

மேலும் யூதர் சமூகத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

மத்திய அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த அச்சுறுத்தல் மதிப்பீட்டு மையம் June 29 அன்று இந்த அறிக்கையை வெளியிட்டது.

இதில் ஒவ்வொரு சதித்திட்டமும் இஸ்லாமிய அரசால் தூண்டப்பட்டது எனவும், ஐந்தாவது சதித்திட்டம் ஒன்று “இஸ்ரேலுக்கு பயணம் செய்த ஒரு கனடியரை தடுப்பதை” உள்ளடக்கியது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை அத்தகைய சதித்திட்டங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றாலும், February 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்ததில் இருந்து கனடாவின் யூத சமூகம் அதிகரித்த முறையில் குறிவைக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

குறிப்பாக Toronto பெரும்பாக பகுதியில், யூத சமூகங்களுக்கு எதிரான துன்புறுத்தல், அச்சுறுத்தும் வகையிலான பேச்சு, தாக்குதல், தீவைப்பு, துப்பாக்கிச் சூடு போன்ற குற்றச் சம்பவங்களின் அதிகரிப்பு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது.

மத ரீதியான வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட குற்றங்களில், கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்களில் 71 சதவீதம் பேர் யூதர்கள் என்பதைக் காட்டும் புதிய புள்ளிவிவரங்களை கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் புதன்கிழமை வெளியிட்டது.

இது முந்தைய ஆண்டின் 69 சதவீதத்திலிருந்து அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Toronto நகர மையத்தின் ஒரு பகுதியில் 12 மணிநேர மின்தடை?

Lankathas Pathmanathan

Brampton இல்லத்தில் தீ: ஒரு பிறக்காத குழந்தை உட்பட 5 பேர் மரணம் – நால்வர் காயம்

Lankathas Pathmanathan

Ontario அறிவியல் மையத்தில் 30 ஊழியர்கள் திடீர் பணி நீக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment