தேசியம்
செய்திகள்

இனப்படுகொலை குறித்த கனடிய பிரதமரின் கருத்து இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்: இலங்கை அரசாங்கம்

கனடியப் பிரதமரின் தமிழின படுகொலை கூற்றை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கிறது.

தமிழின படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு கனடியப் பிரதமர் Justin Trudeau அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடிய நாடாளுமன்றம் May 18 ஆம் திகதியை தமிழின படுகொலை நினைவேந்தல் நாளாக ஒருமனதாக அங்கீகரித்ததை பிரதமர்  இந்த அறிக்கையில் நினைவு கூர்ந்தார்.

ஆனாலும் இலங்கையில் தமிழின படுகொலை நிகழ்ந்தது என்ற Justin Trudeauவின் கூற்றை ஒரு பொய்யான குற்றச்சாட்டு  என இலங்கை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்தது என்ற குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுக்கிறது என இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

இலங்கை தொடர்பில் கனடிய பிரதமர் தொடர்ச்சியாக வெளியிட்ட அறிக்கைகள் கனடாவின் தேர்தல் வாக்கு வங்கி அரசியலின் விளைவு என இலங்கை வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டுகிறது.

இலங்கையில் நடந்தது  இனப்படுகொலை என தவறாக குறிப்பிடும் Justin Trudeauவின் ஒப்புதல், இலங்கை வம்சாவளி கனடியர்களிடையே இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும் என அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

Related posts

2025ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 500,000 புதிய குடிவரவாளர்களுக்கு அனுமதி

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 7ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

இந்தியாவிலிருந்து வரும் நேரடி விமான சேவை தடை நீட்டிக்கப்படுகிறது

Gaya Raja

Leave a Comment