தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 7ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இன்று (செவ்வாய்) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் ஆரம்பத்தில், பிரதமர் பொறிஸ் ஜோன்சன் விரைவில் உடல்தேற வேண்டுமென்ற விருப்பத்தை வெளியிட்டு, ஐக்கிய இராச்சியத்தின் குடி மக்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தார். பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் COVID – 19 தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

இந்த உலகளாவிய பெருந் தொற்று நோயை எதிர் கொள்வதிலும், இன்றியமையாத மருத்துவ பொருட்களைப் பெற்றுக் கொள்வதிலும் உலக நாடுகள் சவால்களை எதிர் கொண்டுள்ள வேளையில், கனடாவில் COVID – 19 இற்கு எதிரான போராட்டத்திற்கு உதவியளிக்க முன் வந்துள்ள ஏறத்தாழ ஐயாயிரம் கனேடிய நிறுவனங்களுக்குப் பிரதமர் ட்ரூடோ நன்றியைத் தெரிவித்தார். தனி நபர் பாதுகாப்புக் கருவிகள், பரிசோதனைப் பொறிகள், சுவாச உதவிக் கருவிகள் (ventilators) போன்றவற்றுக்கு நிலவும் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்காகக் கனேடிய அரசு இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்த தொழிற் துறையை அணி திரட்டும் திட்டத்திற்குப் (Plan to Mobilize Industry) பங்களிக்க இந்த நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

COVID-19 இற்கு எதிரான போராட்டத்தில் தொழிற்சாலைகளை வேறு பொருட்களின் உற்பத்திக்கு ஏற்றவாறாக மாற்றுவதற்கும், உற்பத்திப் பொருட்களை வேறு தேவைக்குப் பயன் படுத்துவதற்கும், புத்தாக்க முயற்சிகளை மேற் கொள்வதற்கும் பல நிறுவனங்களுக்கு உதவியளிக்கும், நோக்கத்தை வெளிப்படுத்தும் கடிதங்களில் கனடிய அரசு ஏற்கனவே கையெழுத்திட்டு விட்டதெனப் பிரதமர் இன்று அறிவித்தார். இவற்றில் சில:

  • கனடாவில் 30,000 சுவாச உதவிக் கருவிகளைத் தயாரிப்பதற்கு Thornhill Medical, CAE, Ventilators for Canadians ஆகியவற்றுடனும் Star Fish Medical இன் தலைமையிலான குழுவொன்றுடனும் கனடிய அரசு இணைந்துள்ளது.
  • இலகுவாகத் தயாரிக்கக் கூடிய சுவாச உதவிக் கருவிகளை உருவாக்க விஞ்ஞானிகளின் குழுவொன்றைத் தலைமை தாங்கி வழி நடத்தும் நோபல் பரிசு வென்ற ஆய்வாளர் மருத்துவர் Art McDonaldடுடன் சேர்ந்து செயற்படுகிறது.
  • மருத்துவ மேலங்கிகளைத் தயாரிப்பதற்கும், புதிய விநியோக வலையமைப்புக்களைக் கனடாவில் உருவாக்குவதற்கும் Arc’teryx, Canada Goose, Stanfield’s ஆகியன உள்ளடங்கலாக 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.

இதே வேளை, மருத்துவ பணியாளர்களைப் பாதுகாப்பதற்குச் சுவாசக் கவசங்களை அரசு தொடர்ந்து கொள்வனவு செய்து வருகிறது. பல மில்லியன் சுவாசக் கவசங்களை Medicom உட்பட்ட கனடிய நிறுவனங்களிடம் கொள்வனவு செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. Medicom நிறுவனம் N95 சுவாசக் கவசங்களை உற்பத்தி செய்வதற்கான அதன் வல்லமையை மேம்படுத்தவுள்ளது. 230 மில்லியன் சத்திர சிகிச்சை சுவாசக் கவசங்களையும், 113,000 லீட்டர் கை சுத்திகரிக்கும் திரவத்தையும் கனடா கொள்வனவு செய்துள்ளதாக அரச சேவைகளும் கொள்வனவும் துறையின் அமைச்சர் அனிதா ஆனந்த் அறிவித்துள்ளார். இதில் 60 மில்லியன் சுவாசக் கவசங்களும், 20,000 லீட்டர் கை சுத்திகரிக்கும் திரவமும் ஏற்கனவே வந்து சேர்ந்து விட்டன. இவற்றில் பலவற்றைக் கனடியர்களுக்கு விற்பனை செய்வதற்கு ஹெல்த் கனடா ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக முன்வரிசைப் பணியாளர்களுக்காக 3M நிறுவனத்திடம் இருந்து மேலும் 500,000 N95 சுவாசக் கவசங்கள் நாளை கனடாவை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் புதிது  புதிதாக வெவ்வேறு பொருட்களுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு வந்தாலும், கனடாவில் இந்த நிலை ஏற்படுவதைத் தடுப்பதற்குக் கனடிய அரசு அதனால் இயன்ற அனைத்தையும் செய்யுமெனப் பிரதமர் ட்ரூடோ கனடியர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

சம்பள மானியம் தொடர்பான சட்ட மூலத்தை அரசு எதிர்க் கட்சிகளிடம் வழங்கியுள்ளதாகவும், மேலும் அதிகமான கனேடிய பணியாளர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் உதவியளிப்பதற்காக இந்தச் சட்ட மூலத்தை விரைவில் நிறை வேற்றுவதற்காக அரசு எதிர்க் கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார்.

இன்று உலக ஆரோக்கிய நாளாகவும், தேசிய பராமரிப்பாளர் நாளாகவும் கடைப்பிடிக்கப்படும் நிலையில், கனடாவில் இந்தப் பெருந் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் இரவு பகலாகப் பணியாற்றிவரும் அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும், பராமரிப்பாளர்களுக்கும் கனடியர்கள் சார்பாகப் பிரதம மந்திரி நன்றியைத் தெரிவித்தார். கனடிய மருத்துவப் பராமரிப்புப் பொறிமுறை ஒரு பெரும் சொத்தெனவும், கனடாவில் ஆரோக்கியம் ஒரு உரிமை எனவும், சிலருக்கு மட்டுமான சலுகை அல்லவெனவும், இதையிட்டு அனைத்துக் கனேடியர்களும் பெருமைப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Updated Emergency Measures by the Canadian Federal Government on April 7th

Prime Minister Justin Trudeau today (Tuesday) addressed the country, by first conveying his wishes for a speedy recovery to Prime Minister Boris Johnson and extending solidarity to the citizens of the United Kingdom. British Prime Minister Boris Johnson is currently admitted to the Intensive Care Unit, after testing positive for COVID-19.

As countries around the world grapple with the pandemic and the demand for critical medical supplies, Prime Minister Trudeau thanked the almost 5000 Canadian companies that have nowstepped forward to help fight COVID-19 in Canada. These companies responded to the Canadian government’s Plan to Mobilize Industry, launched 2 weeks ago, to address shortagesin supplies like personal protective equipment, test kits, ventilators etc.

Today, the Prime Minister announced that the Canadian government has already signed letters of intent with a number of companies to help them retool, repurpose and innovate to fight COVID-19, including:

– Partnering with Thornhill Medical, CAE, Ventilators for Canadians, and a group led by StarFish Medical to produce up to 30,000 made-in-Canada ventilators;

– Working with Nobel Prize-winning researcher Dr. Art McDonald, who is leading a team of scientists to develop ventilators that are easy to make;

– Producing medical gowns and establishing new supply chains right here in Canada, by teaming up with over 20 companies, including Arc’teryx, Canada Goose, and Stanfield’s.

Simultaneously, the government continues to purchase masks to protect healthcare professionals; millions of surgical masks have been orderedfrom several Canadian companies including Medicom, which will increase its production capacity for N95 masks. Minister Anita Anand, Minister of Public Services and Procurement has also confirmed that Canada has sourced over 230 million surgical masks, and 113,000 litres of hand sanitizers. Of this 60 millions masks and 20,000 litres of hand sanitizers have been delivered already. Health Canada has already authorized the sale of many of these products to Canadians. Additionally 500,000 N-95 masks from 3M are expected to arrive tomorrow for frontline workers. Prime Minister

Trudeau assured Canadians as new shortages are heard from countries across the world, the Canadian government will do everything to prevent this from occurring in Canada. Prime Minister Trudeau informed that the government has also proactively shared the proposed legislation on wage subsidy with Opposition parties, and continues to speak to them to pass this legislation quickly to support more Canadian workers and businesses.

With today being World Health Day and National Caregiver Day, the Prime Minister expressed his gratitude on behalf of Canadians to all healthcare professionals and caregivers who are working day and night as Canada confronts this pandemic. He noted Canada’s healthcare system as a major asset, and emphasized that in Canadahealth is a right rather than a privilege, and that is something all Canadians must be proud of.

Related posts

மீண்டும் திறக்கும் திட்டத்தை காலவரையின்றி இடைநிறுத்திய Ontario

Lankathas Pathmanathan

Ontario வரலாற்றில் மிகப்பெரிய வரவு செலவு திட்டம்!

Lankathas Pathmanathan

பசுமைக் கட்சியிலிருந்து விலகி Liberal கட்சியில் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்!

Gaya Raja

Leave a Comment