தேசியம்
செய்திகள்

வாகன திருட்டில் உலகின் முதல் 10 நாடுகளில் கனடா: Interpol

February மாதம் முதல் 1,500க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கனடிய வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக Interpol தெரிவித்துள்ளது.

February முதல் உலகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் 200க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கனடிய வாகனங்கள் கண்டுபிடிக்கப்படுவதாக Interpol கூறுகிறது.

திருடப்பட்ட வாகனங்களுக்கான கனடாவின் தரவுத்தளத்தை Interpolலுடன் ஒருங்கிணைக்க இந்த ஆண்டின் ஆரம்பத்தில் RCMP எடுத்த முடிவு காரணமாக இதுவரை 1,500க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கனடிய வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக Interpol தெரிவித்துள்ளது.

137 நாடுகளில் இருந்து தகவல்களை சேகரிக்கும் Interpol தரவுத்தளம், இந்த ஆண்டு இதுவரை திருடப்பட்ட வாகனங்களில் உலகின் முதல் 10 நாடுகளில் கனடா இடம்பிடித்துள்ளதாகக் குறிப்பிடுகிறது.

Related posts

கனடாவிற்கு பயண அறிவுறுத்தல் விடுத்த இந்தியா!

Lankathas Pathmanathan

இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை வழக்கை கனடா ஆதரிக்கவில்லை: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

June மாத ஆரம்பத்தின் பின்னர் Ontarioவில் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

Leave a Comment