Torontoவில் சுகாதார நடவடிக்கைகளை தளர்த்த நேரம் இதுவல்ல என Torontoவின் தலைமை சுகாதார அதிகாரி கூறினார்.
COVID தொற்றின் மூன்று திரிபுகள் Torontoவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் கருத்தை தலைமை சுகாதார அதிகாரி Eileen de Villa தெரிவித்தார். முதலாவது தொற்றைவிட புதிய திரிபுகள் வேகமாக பரவுவதற்கான திறனுடயவை எனவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் Toronto ஒரு புதிய தொற்று நோய்க்கு மாற்றம் காண்பதாக சுகாதார அதிகாரி தெரிவித்தார். இன்றுடன் (திங்கள்) Ontarioவில் COVID தொற்றின் இங்கிலாந்து திரிபால் பாதிக்கப்பட்ட 219 பேர் அடையாளம் காணப்பட்டனர். அதேவேளை Torontoவில் தொற்றின் புதிய திரிபுகளால் பதிக்கப்பட்ட 27 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.