தேசியம்
செய்திகள்

CERB கொடுப்பனவு பெற்ற சுயதொழில் செய்பவர்கள் அதனை திருப்பிச் செலுத்த நிர்பந்திக்கப்பட மாட்டார்கள்

CERB எனப்படும் கனடாவின் அவசரகால பதிலீட்டு நலத் திட்டத்தில் உதவித் தொகையை பெற்ற தகுதியற்ற சில சுயதொழில் செய்பவர்கள் அதனை திருப்பிச் செலுத்த நிர்பந்திக்கப்பட மாட்டார்கள் என அரசாங்கம் கூறியுள்ளது

கனடிய வேலைவாய்ப்பு அமைச்சர் Carla Qualtroughவின் அலுவலகம் இன்று (செவ்வாய்) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்தத் தகவலை வெளியிட்டது. கனடிய வருமான திணைக்களத்தின் தெளிவற்ற தகவல் காரணமாக.இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

CERB கொடுப்பனவுகளில் 14 ஆயிரம் டொலர்கள் வரை பெற்றுக் கொண்ட சுயதொழில் செய்யும் கனடியர்கள் ஏனைய நிபந்தனைகளை நிவர்த்தி செய்தால் அந்தத் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விபரத்தை தனது செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Justin Trudeauவும் உறுதிப்படுத்தினார்.

CERB மீளச் செலுத்தல் குறித்தும் வருமான வரிகளில் மாற்றங்கள் குறித்தும் கணக்காளர் அரி A அரியரன் பகிர்ந்து கொண்ட தகவல்கள்

 

Related posts

TTC கட்டண உயர்வு அறிவிப்பு

Lankathas Pathmanathan

உரிமையாளர்கள் அனுமதியின்றி வீடு விற்கப்பட்ட சம்பவம்

Lankathas Pathmanathan

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை இரத்து செய்தது CTC!

Lankathas Pathmanathan

Leave a Comment