September 18, 2026
தேசியம்
செய்திகள்

புதிய கனடா-அமெரிக்க வர்த்தக ஆலோசனைக் குழுவை அறிவிக்கும் பிரதமர்?

புதிய கனடா-அமெரிக்க வர்த்தக ஆலோசனைக் குழுவை பிரதமர் Mark Carney நியமிக்கின்றார்.

தற்போதைய ஆலோசனைக் குழுவை முன்னாள் பிரதமர் Justin Trudeau அமைத்திருந்தார்.

இந்த நிலையில் கனடா – அமெரிக்க வர்த்தகம் தொடர்பான புதிய ஆலோசனைக் குழுவை பிரதமர் Mark Carney செவ்வாய்க்கிழமை (21) அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025-ஆம் ஆண்டில் Justin Trudeau அமைத்திருந்த வர்த்தக ஆலோசனை குழுவுக்கு பதிலாக இந்த புதிய குழு செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய ஆலோசனைக் குழுவில் முன்னாள் முதல்வர்கள், தொழிலாளர் தலைவர்கள், தொழில்துறை பங்குதாரர்கள், தூதர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் Mark Carney தனது ஆலோசனைக் குழுவில்  யாரைத் தேர்ந்தெடுப்பார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எதிர்வரும் கோடை காலத்தில் கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்தின் முறையான மறுஆய்வு செயல்முறைக்கு வரமுன்னர் இந்த ஆலோசனைக் குழு  அறிவிக்கப்படவுள்ளது.

Related posts

கட்சி தலைவர்களின் விவாதங்களில் இருந்து பசுமைக் கட்சி நீக்கப்பட்டது  ‘ஜனநாயக விரோதமானது’?

Lankathas Pathmanathan

சீக்கியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு தாக்குதல்: இலங்கையர் கைது!

Lankathas Pathmanathan

காட்டுத் தீயை எதிர்த்துப் போராட உதவும் கனேடிய ஆயுதப் படையினர்

Lankathas Pathmanathan

Leave a Comment