தேசியம்
செய்திகள்

சீனாவில் வணிகம் செய்வதன் அபாயங்களை கனேடியர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்: வெளியுறவு அமைச்சர் Joly

சீனாவில் வணிகம் செய்வதன் புவிசார் அரசியல் அபாயங்களை கனேடியர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly எச்சரித்தார்.

கொள்கை மீட்டமைப்பு குறித்த அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த கருத்தை புதன்கிழமை (09) அவர் தெரிவித்தார்.

இந்த கொள்கை மீட்டமைப்பு ஒரு மாதத்திற்குள் வெளியாகும் என அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

கனடாவில் சீனா நடத்தி வருவதாக கூறப்படும் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த எச்சரிக்கையின் மத்தியில் அமைச்சரின் இந்த கருத்து வெளியானது.

வெளிநாட்டுத் தலையீட்டை எதிர்கொள்ள கனடிய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் Joly உறுதியளித்தார்.

இந்த நிலையில் சீனாவின் அச்சுறுத்தல்களில் இருந்து எமது ஜனநாயகத்தை பாதுகாக்க பிரதமர் Justin Trudeau தவறிவிட்டார் என எதிர்கட்சி தலைவர் Pierre Poilievre குற்றம் சாட்டினார்

கனேடியத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கடந்த January முதல் பிரதமருக்குத் தெரிந்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் கவலைக்குரியது எனவும் Poilievre கூறினார்.

கனடாவை சீனா குறிவைத்து வருவதாகக் கூறப்படும் நிலையில் இந்த விடயம் குறித்த அவசர சபைக் குழுக் கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோருகின்றனர்.

Related posts

தேர்தல், வெற்றி தோல்விகளை ஆராய பிரச்சார மதிப்பாய்வு : NDP தலைவர் Singh

Gaya Raja

ஹெய்ட்டி நெருக்கடி குறித்த அவசர கூட்டத்தில் Bob Rae பங்கேற்பு

Lankathas Pathmanathan

இலையுதிர் காலத்தில் மற்றொரு booster தடுப்பூசியை பெற பரிந்துரை

Lankathas Pathmanathan

Leave a Comment