September 16, 2026
தேசியம்
செய்திகள்

பெரும்பான்மை அரசமைத்தார் Mark Carney

பிரதமர் Mark Carney தலைமையிலான Liberal கட்சி பெரும்பான்மை அரசமைக்கிறது.
கடந்த April மாதம் சிறுபான்மை அரசை வெற்றி பெற்று ஒரு வருடம் கழிந்த நிலையில் Mark Carney பெரும்பான்மை அரசமைக்கிறார்.
இது Liberal கட்சி பல ஆண்டுகளாக எட்டாத ஒரு நிலை இதுவாகும்.
திங்கட்கிழமை (13) நடைபெற்ற மூன்று மத்திய இடைத் தேர்தல்களிலும் Liberal கட்சி வெற்றி பெற்றது.
இந்த இடைத் தேர்தல் வெற்றிகள், நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க பெரும்பான்மைகளில் ஒன்றை Liberal கட்சிக்கு வழங்கியுள்ளன.
முன்னாள் Liberal அமைச்சர்கள் இருவர் பதவி விலகியதை தொடர்ந்து, Scarborough தென்மேற்கு, University-Rosedale தொகுதி வாக்காளர்கள் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
கனடாவின் உச்ச நீதிமன்றம் தேர்தல் முடிவுகளை இரத்து செய்த Terrebonne தொகுதியிலும் Liberal கட்சி வெற்றி பெற்றது.
Scarborough தென்மேற்கு தொகுதியில் Doly Begum, University-Rosedale தொகுதியில் Danielle Martin, Terrebonne தொகுதியில் Tatiana Auguste ஆகியோர் Liberal கட்சி சார்பில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
இந்த இடைத் தேர்தலின் பின்னர் Liberal கட்சி 174, Conservatives 140, Bloc Québécois 22, NDP 6, பசுமைக் கட்சி ஒன்று என நாடாளுமன்ற ஆசன பகிர்வு தற்போது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

FIFA போட்டி நடைபெறும் இடங்களுக்கு அருகே 20 drone பறிமுதல்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 26ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)

thesiyam

0.5 சதவீதமாக வட்டி விகிதத்தை உயர்த்தும் கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Leave a Comment