தேசியம்
செய்திகள்

கனடாவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இந்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பம்

கனடாவுக்குள் வரும் சர்வதேச பயணிகளுக்கான விடுதிகளில் கட்டாய தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் இந்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

பிரதமர் Justin Trudeau இன்று (வெள்ளி) இந்த அறிவித்தலை வெளியிட்டார். கனடாவுக்கு வந்தபின் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக பயணிகள் விடுதிகளில் February 22ஆம் திகதி முதல் தங்கவைக்கப்படுவார்கள் என இன்று Trudeau அறிவித்தார்.

இந்த புதிய விதிகளின் கீழ், கனடாவுக்குத் திரும்பும் பயணிகள் தங்கள் சொந்த செலவில் விமான நிலையத்தில் COVID பரிசோதனை செய்ய வேண்டும். அதன் பின்னர் தமது பரிசோதனை முடிவு கிடைக்கும் வரை அவர்கள் தங்களது தனிமைப்படுத்தலின் முதல் மூன்று நாட்களை மேற்பார்வையிடப்பட்ட விடுதியில் செலவழிக்க வேண்டியிருக்கும். இந்த மூன்று நாட்களுக்கான செலவு 2 ஆயிரம் டொலர்கள் வரை இருக்கும் எனவும் அதனை செலுத்துவது பயணிகளின் பொறுப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் February 18 முதல் அரசினால் அங்கீகாரம் பெற்ற விடுதிகளில் தமது தங்குமிடத்தை முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் இன்று அறிவிக்கப்பட்டது. கனடாவில் வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்கும் நான்கு சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகிலும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகள் உள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, மத்திய சுகாதார அமைச்சர் Patty Hajdu கூறினார்

எதிர்மறையான COVID முடிவுகளைக் கொண்டவர்கள் மீதமுள்ள இரண்டு வார தனிமைப்படுத்தலை வீட்டிலேயே தொடர அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டடாக பரிசோதனையின் மூலம் கண்டறியப் படுபவர்கள் அரசாங்கத்தால் நிர்வாகிக்கப்படும் தனிமைப்படுத்தல் இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

Related posts

கனடாவில் விரைவில் பொதுத் தேர்தல்?

Lankathas Pathmanathan

உக்ரேனிய இராணுவத்துடன் இணைந்து போரிட்ட இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான நிதியுதவி குறித்து கலந்துரையாட மத்திய அரசிடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment