தேசியம்
கனேடிய தேர்தல் 2021 செய்திகள்

ஹரி ஆனந்தசங்கரியின் தேர்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

Scarborough-Rouge Park தொகுதியின் Liberal கட்சி வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரியின் தேர்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை (August 22, 2021) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.

875 Milner வீதி, Unit 111 Scarboroughவில் அமைந்துள்ள ஹரி ஆனந்தசங்கரியின் பரப்புரை அலுவலகத்தில் இந்த தேர்தல் பரப்புரையின் ஆரம்பம் நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளது.

சமூகத்தைச் சேர்ந்தோர், தேர்தல்களில் தெரிவான மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என ஹரி ஆனந்தசங்கரியை மீண்டும் தெரிவு செய்வதற்கான தேர்தல் பரப்புரை பேச்சாளர் தேசியத்திடம் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு Scarborough-Rouge Park தொகுதியில் இருந்து முதன் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட ஹரி ஆனந்தசங்கரி, 2019 ஆம் ஆண்டும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

அவசரகால நிலையை நிறுத்தும் Ontario

Lankathas Pathmanathan

Ontario மாகாண Sunshine பட்டியல் வெளியானது

Lankathas Pathmanathan

குற்றச்சாட்டுகளை மறுக்கும் Hockey கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment