September 18, 2026
தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

பொது தேர்தல் விவாதங்களுக்கு ஐந்து கட்சித் தலைவர்கள் அழைப்பு!

பொது தேர்தல் விவாதங்களுக்கு ஐந்து கூட்டமைப்பு கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Liberals, Conservatives, NDP, Bloc, பசுமைவாதிகள் அனைவரும் விவாதங்களில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.

தலைவர்கள் விவாத ஆணையம் தனது முடிவை சனிக்கிழமை வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில் அறிவித்தது.

NDPயும் பசுமை கட்சியும் விவாதங்களில் கலந்து கொள்வதற்கான ஒப்புதல் கடிதங்களை அனுப்பியுள்ளன.

கனடாவின் மக்கள் கட்சி (People’s Party of Canada – PPC) தலைவர் Maxime Bernier இந்த விவாதங்களில் பங்கேற்க மாட்டார்.

மக்கள் கட்சி விவாதங்களில் பங்கேற்க தகுதி பெறுவதற்கு தேவையான நான்கு சதவீத வாக்குகளை பெறாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு மொழி விவாதம் September 8ஆம் திகதி , இரவு 8 முதல் 10 வரை திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ ஆங்கில மொழி விவாதம் September 9ஆம் திகதி , இரவு 9 முதல் 11 வரை திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு விவாதங்களும் கனடிய வரலாற்று அருங்காட்சியகத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Related posts

கனடாவின் பல பகுதிகளில் குளிர் கால வானிலையின் தாக்கம்

Lankathas Pathmanathan

கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்தை தாண்டியது!!!

Gaya Raja

RCMP அதிகாரி Quebec காவல்துறையால் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

Leave a Comment