தேசியம்
செய்திகள்

Ontarioவில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்றுக்கள்!!

June மாதத்தின் ஆரம்பத்தின் பின்னர் சனிக்கிழமை Ontarioவில் அதிக எண்ணிக்கையிலான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

சனிக்கிழமை 689 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.

இது June மாதத்தின் 5ஆம் திகதிக்கு பின்னரான அதிக எண்ணிக்கையிலான தொற்றுகளாகும்.

பல வாரங்களாக அதிகரித்து வரும் Ontarioவின் ஏழு நாள் சராசரி, இப்போது 534 ஆக உள்ளது.

சனிக்கிழமை மேலும் ஒரு COVID இறப்பையும் பதிவு செய்துள்ளது.

ஆகவே மொத்த இறப்பு எண்ணிக்கை 9,451 ஆக உள்ளது.

சனிக்கிழமையன்று பதிவான தொற்றுக்களில் 552 பேர் முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலையுதிர் காலத்தில் மற்றொரு booster தடுப்பூசியை பெற பரிந்துரை

Lankathas Pathmanathan

உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற நீதிபதி Russell Brown முடிவு

Lankathas Pathmanathan

ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment