தேசியம்
செய்திகள்

நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் புதிய இலக்கு

கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை 2026ஆம் ஆண்டில் சமன் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

குடிவரவு அமைச்சர் Marc Miller அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய இலக்குகளை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

வீடு உட்பட பிற சேவைகள் நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த அறிவித்தல் புதன்கிழமை  வெளியானது.

இதில் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 2026இல் 500,000 ஆக வைத்திருக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

திட்டமிட்டபடி 2024ம், 2025க்கான இலக்குகள் முறையே 485,000 மற்றும் 500,000 ஆக அதிகரிக்கும் என திட்டங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

Related posts

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சிவப்பு, மஞ்சள் நிறங்களில் ஒளியூட்டப்படவுள்ள Toronto என்ற அடையாள எழுத்துக்கள்

Lankathas Pathmanathan

புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

கனடாவில் ஆறாவது COVID அலை தவிர்க்க முடியாதது!

Lankathas Pathmanathan

Leave a Comment