தேசியம்
செய்திகள்

Quebec Liberal கட்சியின் புதிய தலைவர் 2025 வரை நியமிக்கப்பட மாட்டார்!

Quebec மாகாண Liberal கட்சியின் புதிய தலைவர் 2025ஆம் ஆண்டில் இலை துளிர் காலம் வரை நியமிக்கப்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக Quebec மாகாண Liberal நிர்வாகக் குழுவின் தலைவர் Nicholas Plourde கூறினார்.

இந்த முடிவு கட்சி  உறுப்பினர்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை Quebec மாகாண Liberal கட்சியின் புதிய தலைவர் பதவிற்கு ஒரு வேட்பாளர் மாத்திரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Quebec மாகாண Liberal கட்சியின் தலைமை பதவியில் இருந்து Dominique Anglade கடந்த ஆண்டு விலகினார்.

கடந்த ஆண்டு மாகாணத் தேர்தலுக்கு ஐந்து வாரங்களுக்கு பின்னர் அவர் பதவி விலகியிருந்தார்.

இந்த தேர்தலில் Quebec மாகாண முதல்வர் François Legault தலைமையிலான Avenir Québec கூட்டணி பலமான பெரும்பான்மையுடன் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

Liberal கட்சியின் இடைக்கால தலைமை பதவிக்கு Marc Tanguay நியமிக்கப்பட்டுள்ளார்.

நிரந்தர தலைமை பதவிற்கு பலர் ஆர்வம் தெரிவித்த போதிலும் Frédéric Beauchemin மாத்திரிமே இதுவரை
வேட்பாளராக பதிவாகியுள்ளார்.

Related posts

கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் அமைப்பாளர் தொடர்ந்து சிறையில்

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: பத்தாவது நாளில் பதக்கம் எதையும் வெல்லாத கனடா

Lankathas Pathmanathan

Rwanda அரசாங்கத்திற்கு உதவிய குற்றச்சாட்டு விசாரணையில் RCMP அதிகாரி கைது

Lankathas Pathmanathan

Leave a Comment