தேசியம்
செய்திகள்

West Bank பகுதியில் இருந்து வெளியேறிய கனேடியர்களின் முதல் குழு ஜோர்டான் சென்றடைந்தது

West Bank பகுதியில் இருந்து வெளியேறிய கனேடியர்களின் முதல் குழு ஜோர்டான் நாட்டை சென்றடைந்துள்ளது.

West Bank பகுதியில் இருந்து கனேடியர்களின் முதல் குழு திங்கள்கிழமை (16) ஜோர்டான் சென்றடைந்ததாக கனடாவின் வெளியுறவு அமைச்சர் Melanie Joly உறுதிப்படுத்தினார்.

21 கனடியர்கள் திங்களன்று ஜோர்டான் சென்றடைந்தனர் என வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

இஸ்ரேல், ஜோர்டான், கனடாவில் உள்ள அதிகாரிகளின் தொடர் முயற்சியை தொடர்ந்து இவர்கள் ஜோர்டான் சென்றடைந்தது குறித்து அமைச்சர் Melanie Joly மகிழ்ச்சி தெரிவித்தார்.

West Bank, காசா பகுதியில் சுமார் 450 கனடியர்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

தவிரவும் 6,800க்கும் மேற்பட்ட கனடியர்கள் இஸ்ரேலில் இருப்பதாக பதிவு செய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (15) இரவு வரை, கனேடிய ஆயுதப்படையின் இராணுவ வான்வழி நடவடிக்கை மூலம் 1,000 கனடியர்கள், அவர்களது குடும்பத்தினர் இஸ்ரேலில் இருந்து Athens சென்றடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது வாழ்க்கைச் செலவு

Lankathas Pathmanathan

மாகாணங்கள் Notwithstanding உட்பிரிவை முன்கூட்டியே பயன்படுத்தக்கூடாது: Trudeau

Lankathas Pathmanathan

2020ஆம் ஆண்டை விட, Omicron திரிபின் முதல் 40 நாட்களில் அதிக தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment