தேசியம்
செய்திகள்

கனடிய தேசியவாதக் கட்சி நிறுவனர் கைது

கனடிய தேசியவாதக் கட்சியின் (Canadian Nationalist Party) நிறுவனர் Travis Patron கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு Saskatchewan-னைச் சேர்ந்த 35 வயதான இவர், வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வருடத்தின் முன்னர் ஆரம்பமான RCMP விசாரணை இவரது கைதுடன் முடிவுக்கு வந்தது.

விரிவான விசாரணையின் பின்னர் April 10 அன்று, வெறுப்பைத் தூண்டியதாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் May 13 Carlyle மாகாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

2019-ஆம் ஆண்டில் Regina ஆசிரியர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, இரண்டு தாக்குதல் குற்றச்சாட்டுகளில் Travis Patron குற்றவாளி என June 2022-இல் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதே ஆண்டின் பிற்பகுதியில், இணையத்தில் பதிவிடப்பட்ட யூத-எதிர்ப்பு ஒளிப்பதிவு தொடர்பாக, அவர் வெறுப்பு குற்றத்திற்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

August 2023-இல், இரண்டு சம்பவங்களில் காவல்துறை அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்ததற்காக அவர் Saskatoon-இல் கைது செய்யப்பட்டார்.

2019 பொதுத் தேர்தலில்  Travis Patron கனடிய தேசியவாதக் கட்சியை வழிநடத்தினார்.

கனடிய தேசியவாதக் கட்சி தற்போது செயலிழந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

2022-ஆம் ஆண்டில் கனடிய தேசியவாதக் கட்சி பதிவு நீக்கம் செய்யப்பட்டது.

இவருக்கு எதிரான புதிய குற்றசாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Toronto நகர முதல்வர் தேர்தல் கருத்துக் கணிப்பில் யார் முன்னிலையில்?

Lankathas Pathmanathan

நரேந்திர மோடிக்கு அழைப்பு: கட்சியினுள் விமர்சனங்களை எதிர்கொள்ளும் Mark Carney!

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment