தேசியம்
செய்திகள்

நரேந்திர மோடிக்கு அழைப்பு: கட்சியினுள் விமர்சனங்களை எதிர்கொள்ளும் Mark Carney!

கனடாவில் நடைபெறவுள்ள G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக  இந்திய பிரதமருக்கு கனடிய பிரதமர் விடுத்த அழைப்பை Liberal நாடாளுமன்ற உறுப்பினர் கண்டித்துள்ளார்.

G7 உச்சி மாநாடு June 15 முதல் 17 வரை Alberta மாகாணத்தில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடிக்கு கனடிய பிரதமர் Mark Carney அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்புக்காக Mark Carney தனது சொந்தக் கட்சியினுள் விமர்சனங்களை எதிர் கொள்கிறார்.

இந்த விடயத்தில் கனடிய பிரதமர் முடிவை British Colombia மாகாணத்தின் Surrey நாடாளுமன்ற உறுப்பினர் Sukh Dhaliwal கண்டித்துள்ளார்.

Surrey தொகுதி ஒரு பெரிய சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இந்த முடிவு ஒரு தவறான செய்தியை வெளிப்படுத்துகிறது என Sukh Dhaliwal கூறினார்.

G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நரேந்திர மோடியை அழைக்கும் முடிவை ஏற்கவில்லை எனக் கூறிய Sukh Dhaliwal, இந்த விடயத்தில் தனது தொகுதியின் பல வாக்காளர்கள் “ஆத்திரத்துடன்” தன்னைத் தொடர்பு கொண்டதாக கூறினார்.

நரேந்திர மோடியை அழைக்கும் முடிவை கனடாவின் சீக்கிய சமூகம் கண்டித்து வருகிறது.

கனடாவில் நிகழ்ந்த சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar-ரின் கொலைக்கு இந்தியா காரணம் என முன்னாள் கனடிய பிரதமர் Justin Trudeau குற்றம் சாட்டியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் வாகன உரிமத் தகடுகளை புதுப்பிக்க வேண்டிய அவசியம்

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வருக்கு எதிராக பார்த்தி கந்தவேல் புகார்

Lankathas Pathmanathan

ரஷ்ய ஜனாதிபதி மீது கனடா பொருளாதாரத் தடை

Lankathas Pathmanathan

Leave a Comment