தேசியம்
செய்திகள்

Terrebonne தொகுதியிலும் Liberal வெற்றி

Quebec மாகாணத்தின் Terrebonne தொகுதியில் Tatiana Auguste வெற்றி பெற்றார்.
திங்கட்கிழமை (13) நடைபெற்ற மத்திய இடைத் தேர்தலில் Terrebonne தொகுதியில் Liberal கட்சி சார்பில் Tatiana Auguste வெற்றி பெற்றார்.
கடந்த பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் Liberal கட்சி வெற்றி பெற்ற நிலையில் கனடாவின் உச்ச நீதிமன்றம் February மாதம் தேர்தல் முடிவை இரத்து செய்தது.
இந்த நிலையில் நடைபெற்ற இடைத் தேர்தலில் Liberal கட்சி சார்பில் Tatiana Auguste, Bloc Québécois சார்பில் Nathalie Sinclair-Desgagné, Conservative கட்சி சார்பில் Adrienne Charles, NDP கட்சி சார்பில் Maxime Beaudouin, பசுமைக் கட்சி சார்பில் Benjamin Rankin போட்டியிட்டனர்.
இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 48 பேர் போட்டியிட்டனர்.
இந்தத் தொகுதியில் முன்கூட்டிய வாக்களிப்பின் போது 18,200 வாக்குகள் பதிவாகின.

Related posts

அமெரிக்கா – ஈரான் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்கும் கனடா

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு கனடிய பிரதமரின் அறிக்கை

Lankathas Pathmanathan

பசுமைக் கட்சியின் இடைக்காலத் தலைவர் தெரிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment