தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிட போவதில்லை: Michael Ford

Toronto நகர முதல்வர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என Michael Ford அறிவித்தார்.

இதன் மூலம் சில வாரங்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிட போவதில்லை என Michael Ford வியாழக்கிழமை (02) அறிவித்தார்.

Ontario மாகாண முதல்வர் Doug Ford-டின் மருமகனான Michael Ford தனது முடிவை அறிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் Ontario மாகாண சபை உறுப்பினரும், Toronto நகர சபை உறுப்பினருமான Michael Ford, Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வந்தார்.

Toronto நகர முதல்வர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என John Tory கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா என்பதை Toronto நகர முதல்வர் Olivia Chow இதுவரை அறிவிக்கவில்லை.

2023 நகர முதல்வர் இடைத் தேர்தலில் தோல்வியடைந்த நகர சபை உறுப்பினர் Brad Bradford மீண்டும் நகர முதல்வர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

நகரசபைத் தேர்தல் October 26-ஆம் திகதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகன விபத்தில் பலியான காவல்துறை அதிகாரியின் இறுதி சடங்கு

Lankathas Pathmanathan

Haitiக்கான புதிய உதவிகளை அறிவித்த பிரதமர்

Lankathas Pathmanathan

கனடாவிலிருந்து பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment