இந்த ஆண்டிற்கான PlayOffs சுற்று தகுதியை ஏற்கனவே இழந்த Toronto Blue Jays அணி, ஞாயிற்றுக்கிழமை (27) தனது கடைசி ஆட்டத்தில் வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.
ஞாயிறன்று Rogers மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 42,131 இரசிகர்கள் திரண்டு ஏமாற்றமளித்த ஆண்டில் தங்களது பேராதரவை வெளிப்படுத்தினர்.
மூத்த பந்துவீச்சாளரான Max Scherzer எட்டாவது innings-சில் மைதானத்தை விட்டு வெளியேறிய போது இரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு பிரியாவிடை அளித்தனர்.
தனது 6 ஆண்டு ஒப்பந்தத்தின் இறுதிப் போட்டியில் விளையாடிய நட்சத்திர வீரர் George Springer மூன்றாவது innings சில் மாற்றப்பட்ட போது, ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று தங்களது வாழ்த்துகளை தெரிவித்தது இரசிகர்களை நெகிழ வைத்தது.
தனது $500 மில்லியன் ஒப்பந்தம் குறித்த சமீபத்திய நேர்காணல் சர்ச்சையைத் தொடர்ந்து மன்னிப்பு கோரியிருந்த Vladimir Guerrero Jr.-க்கு இந்த ஆட்டத்தில் ஓய்வளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு World Series இறுதிப்போட்டி வரை சென்ற Blue Jays அணி, இந்த ஆண்டில் பெரும் பின்னடைவை சந்தித்தது.
தற்போதைய American League கிழக்கு பிரிவில், 79 வெற்றிகள் – 83 தோல்விகளுடன் கடைசி இடத்தைப் பிடித்து இந்த ஆண்டை சீசனை அவர்கள் முடித்துள்ளனர்.
