தமிழர் ஒருவர் கனடாவின் நீதி அமைச்சராகவும் சட்டமா அதிபராகவும் பதவியேற்கவுள்ளார்.
அமைச்சர் கரி ஆனந்தசங்கரி, நீதி அமைச்சராகவும் சட்டமா அதிபராகவும் வெள்ளிக்கிழமை (14) பதவியேற்கவுள்ளார்.
பிரதமராக பதவி பிரமாணம் செய்யவுள்ள Mark Carney அமைச்சரவையில் இந்த அமைச்சு பதவி அவருக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த பதவி நியமனத்தை வியாழக்கிழமை (13) தேசியம் உறுதிப்படுத்தியது.
கரி ஆனந்தசங்கரி தற்போது சுதேச உறவுகள் அமைச்சராக பதவி வகிக்கிறார்.
இந்த பதவியேற்பு வைபவம் வெள்ளி காலை 11 மணியளவில் ஆளுநர் நாயகம் Mary Simon முன்னிலையில், அவரது உத்தியோகபூர்வ வாசல் தலமான Rideau Hall இல் நடைபெறும்.
புதிதாக பதவியேற்கும் Mark Carney-யும் அவரது அமைச்சரவையும் நீண்ட காலம் பதவியில் நீடிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றம் March 24 அன்று மீண்டும் கூடுவதற்கு முன்னதாக ஒரு தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.