கனேடிய பொருளாதாரத்தில் June மாதம் 230,700 புதிய தொழில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கனேடிய புள்ளிவிவரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை இந்தத் தகவலை வெளியிட்டது.
தொற்றின் பரவலை குறைப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் நாடாளாவிய ரீதியில் விலத்தப்பட்ட நிலையில் புதிய வேலைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் June மாதம் புதிதாக 263,900 பகுதி நேர வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளை 33,200 முழுநேர வேலை வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் June மாதம் வேலையற்றோர் விகிதம் 7.8 சதவீதமாக சரிந்தது.
வேலையற்றோர் விகிதம் May மாதம் 8.2 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.