Ontario மாகாணம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலான காலத்தில் முதல் தடவையாக சனிக்கிழமை 1,800க்கும் அதிகமான COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளது.
Ontario சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை 1,829 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர். 11 மரணங்களும் Ontarioவில் சனிக்கிழமை பதிவாகின. தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்து மொத்தம், 7,223 மரணங்கள் Ontarioவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் Ontario இறுதியாக 1,800க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்களை February மாதம் 2ஆம் திகதி பதிவு செய்திருந்தது. அன்று மொத்தம் 1,969 தொற்றுகள் Ontarioவில் பதிவாகின.
52,900 சோதனைகள் முடிந்த நிலையில், Ontario சுகாதார அமைச்சகம் சனிக்கிழமையன்று மாகாணத்தின் நேர்மறை விகிதம் 3.6 சதவீதமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கையின் மாகாணத்தின் ஏழு நாள் சராசரி இப்போது 1,532 ஆக உள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்னர் 1,337 ஆக இருந்தது.
தொற்றின் காரணமாக தற்போது 765 பேர் மருத்துவமனையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் 302 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 189 பேர் ventilatorரின் உதவியுடன் சுவாசிக்கும் நிலை Ontarioவில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Ontarioவில் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த எண்ணிக்கை 327,083 ஆக உள்ளது. இதில் மரணங்களும் சுகமடைந்தவர்களும் அடங்குகின்றனர். Ontarioவில் சனிக்கிழமையுடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 306,050 என்பது குறிப்பிடத்தக்கது.