தேசியம்
செய்திகள்

தலிபான் பிரதிநிதிகளை சத்தித்த கனடா அதிகாரிகள்!

கனடா அதிகாரிகள் கத்தாரில் தலிபான் பிரதிநிதிகளை சந்தித்தனர்.

கனடா உட்பட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் வியாழக்கிழமை கத்தாரில் தலிபான் அதிகாரிகளைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பில் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கான மனிதாபிமான உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் பொருளாதார நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஊடாகவும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும் உதவ கனேடிய அரசு தயாராக உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் தாலிபான்களுக்கு கனேடிய அரசு நேரடியாக உதவி அல்லது பணத்தை வழங்காது என அமைச்சர் Dominic LeBlanc கடந்த வாரம் கூறியிருந்தார்.

Related posts

B.C. வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயம்!

Lankathas Pathmanathan

Fiji உல்லாச தளத்தில் கனடியர் காணாமல் போயுள்ளார்!

Lankathas Pathmanathan

மூடப்பட்டது 29 ஆண்டுகால International Language Academy of Canada (ILAC)!

Lankathas Pathmanathan

Leave a Comment