தேசியம்
செய்திகள்

மத்திய எரிவாயு வரிகளை தற்காலிகமாக இரத்து செய்ய Conservative கட்சித் வலியுறுத்தல்

மத்திய எரிவாயு வரிகளை இந்த ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு ரத்து செய்ய Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre கோருகிறார்.

இந்த வரி விலக்கு, அதிகரித்து வரும் எரிபொருள் விலையால் பாதிக்கப்படும் கனடியர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் என அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு இந்த ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு சராசரியாக சுமார் $1,200 சேமிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில், கூறினார்.

“கனடியர்களுக்கு மலிவு விலையில் எரிபொருளும் உணவும் கிடைக்க வேண்டும்,” என அந்த அறிக்கையில் Pierre Poilievre கூறினார்.

மத்திய கிழக்கு மோதல் காரணமாக எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து, அயர்லாந்து, ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் எரிபொருள் வரிகளைக் குறைத்துள்ளன என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த தற்காலிக வரி குறைப்பால் எரிபொருளின் விலை 25 சதத்தினால் குறையும் என Conservative கட்சியினர் கூறுகிறது.

Related posts

கனடாவில் நாளாந்தம் 3,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

கட்சித் தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை இரத்து செய்யும் பசுமைக் கட்சி!

Gaya Raja

கனடாவில் விரைவில் புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டுகள்?

Leave a Comment