September 13, 2026
தேசியம்
செய்திகள்

புதிய நாடாளுமன்ற உறுப்பினர் அரசுடன் இணைந்து வாக்களிப்பார் : Mark Carney

சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக புதிய Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், ‘அரசுடன் இணைந்து வாக்களிப்பார்’ என பிரதமர் தெரிவித்துள்ளார்

நீண்டகால Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Marilyn Gladu புதன்கிழமை (08) Liberal அரசாங்கத்துடன் இணைந்தார்.

Liberal கட்சியில் இணைவதற்கு முன்னதாக Marilyn Gladu-விடம் சமூகப் பிரச்சினைகள் குறித்த அவரது முந்தைய நிலைப்பாடுகள் குறித்து பேசியதாக பிரதமர் Mark Carney கூறினார்.

Sarnia-Lambton-Bkejwanong நாடாளுமன்ற உறுப்பினரான Marilyn Gladu, அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார் என உறுதியளிக்கப்பட்டுள்ளது என Mark Carney தெரிவித்தார்.

அண்மையில் கட்சி மாறிய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், தத்தமது பிராந்தியங்கள், பின்னணிகளிலிருந்து மாறுபட்ட கண்ணோட்டங்களை கொண்டு வந்தாலும், இறுதியில் “அவர்கள் அனைவரும் கட்சியின் விழுமியங்களைப் பின்பற்றுகிறார்கள்” என Mark Carney வியாழக்கிழமை (09) நம்பிக்கை தெரிவித்தார்.

Liberal அரசாங்கத்தில் இணைந்ததன் மூலம் Marilyn Gladu, அரசியல் களத்தில் உள்ள பல கனடியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இவரது கட்சி மாற்றத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் எதிர்வினைகள் வெளியாகி வருகின்றன.

Related posts

கனடாவில் COVID மரணங்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது

Gaya Raja

தமிழ் கனடிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

Albertaவில் தொடரும் தொற்று எண்ணிக்கை

Gaya Raja

Leave a Comment