தேசியம்
செய்திகள்

Dominican குடியரசு பேருந்து விபத்தில் கனடியர்கள் சிக்கினர்?

Dominican குடியரசு பேருந்து விபத்தில் கனடியர்கள் பாதிக்கப்பட்டனர்.

Dominican குடியரசுக்கான கனடியத் தூதரகம் இந்தத் தகவலை வெளியிட்டது.

ஞாயிற்றுக்கிழமை (01) இரவு நிகழ்ந்த சுற்றுலாப் பேருந்து விபத்தில் கனடியர்கள் பாதிக்கப்பட்டதாக Dominican குடியரசுக்கான கனடிய தூதரகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தூதரக ஊழியர்கள் தூதரக உதவியை வழங்குவதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட தூதரகத்தின் அறிக்கை கூறுகிறது.

ஆனால் குறிப்பிட்ட பேருந்தில் எத்தனை கனடியர்கள் இருந்தார்கள் அல்லது அவர்களின் நிலை என்ன என்பதை தூதரகம் கூறவில்லை.

இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், குறைந்தது 19 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறந்த இருவரும் வெளிநாட்டினர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஆனாலும் அவர்களின் குடியுரிமையை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

Related posts

வங்கி கொள்ளையை தடுக்க முயன்ற Toronto காவல்துறை அதிகாரிகள் இருவர் காயம்!

Gaya Raja

Ontario மாகாண தேர்தல் பிரச்சார வரவு செலவு திட்டம் வெளியீடு

கனடாவில் உள்ள சர்வதேச பட்டதாரிகளுக்கான புதிய பணி அனுமதி திட்டம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment