தேசியம்
செய்திகள்

10 நாடுகளுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனடியர்களுக்கு அறிவுறுத்தல்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், 10 நாடுகளுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சு கனடியர்களுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

தற்போது 85,000க்கும் மேற்பட்ட கனடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் இந்தப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரான் மீது சனிக்கிழமை தாக்குதல் முன்னெடுத்த அமெரிக்காவும் இஸ்ரேலும், அதி உயர் தலைவர் Ayatollah Ali Khamenei கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தின.

இதனைத் தொடர்ந்து பழிவாங்கும் தாக்குதல்கள் அப்பகுதியில் மோதலை விரிவுபடுத்தி வருகின்றது.

இந்தப் போரின் விளைவாக கனடியர்கள் எவரும் காயமடையவோ அல்லது கொல்லப்படவோ இல்லை என கனடிய மத்திய அரசு தெரிவித்தது.

இந்த மூலம் பயண எச்சரிக்கை, ஆலோசனைகளை பெற முடியும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.

Tel Aviv-வில் உள்ள அத்தியாவசியமற்ற தூதரக ஊழியர்கள் வேறு இடத்திற்கு இடம்பெயருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என கடந்த சனியன்று கனடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மத்திய கிழக்கில் உள்ள கனடிய தூதரக ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என கனடிய வெளிவிவகார அமைச்சு கூறியது.

Related posts

Rexdale துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டாவது நபர் மரணம்

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற அமர்வுகள் முன்கூட்டியே ஒத்திவைப்பு!

Lankathas Pathmanathan

200,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்தல் திணைக்களத்தில் தற்காலிக பணி!

Lankathas Pathmanathan

Leave a Comment