December மாதத்தில் வெற்றிடமாக இருந்த ஒவ்வொரு வேலை வெற்றிடத்திற்கு மூன்று கனடியர்கள் வேலையில்லாமல் இருந்தனர் என புதிதாக வெளியான புள்ளிவிபரத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இது ஒரு வருடத்திற்கு முந்தைய காலத்தை விட அதிகரிப்பைக் குறிக்கிறது.
வியாழக்கிழமை (26) வெளியிடப்பட்ட கனடிய புள்ளிவிவரத் திணைக்கள அறிக்கையின்படி இந்தத் தகவல் வெளியானது.
December 2025-இல் 514,600 வேலை வெற்றிடங்கள் இருந்தன.
இது முந்தைய ஆண்டை விட 3.8 சதவீதம் குறைவானதாகும்.
இது கடந்த ஆண்டு March மாதத்திற்கு பின்னர் அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்களை குறிக்கிறது.
வேலையற்ற கனடியர்களின் எண்ணிக்கை December மாதத்தில் 49,100-ஆக அதிகரித்துள்ளது என தனித்தனியாக வெளியிடப்பட்ட தொழிலாளர் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
December மாத வேலையற்றோர் விகிதம் 6.8 சதவீதமாக இருந்தது.
இது November.மாதத்தில் 6.5 சதவீதத்தில் இருந்து அதிகரித்துள்ளது.
