September 27, 2026
தேசியம்
செய்திகள்

அமெரிக்காவிற்கு மாற்றீடாக சீனா அமையக்கூடாது: Pierre Poilievre

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் கனடா அதிக செல்வாக்கை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை Conservative தலைவர் Pierre Poilievre வலியுறுத்தினார்.

Toronto-வில் உள்ள கனடாவின் பொருளாதார கழகத்தில் வியாழக்கிழமை (26) ஆற்றிய உரையில் Pierre Poilievre இந்த வலியுறுத்தலை முன்வைத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் இருந்தாலும், கனடா அமெரிக்காவிற்கு பதிலாக சீனாவை மாற்றக் கூடாது எனவும் அவர் வாதிட்டார்.

வெளிநாடுகளில் செல்வாக்கை அதிகரிக்க உள்நாட்டில் வலுவாக மாறுவதை மையமாகக் கொண்ட இந்த உரையில், கனடா-அமெரிக்க உறவுகளுக்கான தனது தொலைநோக்குப் பார்வையை Pierre Poilievre முன்வைத்தார்.

“நாம் எதைக் கட்டுப்படுத்துகிறோம், எதைக் கட்டுப்படுத்தவில்லை என்பதை பிரித்துப் பார்க்க வேண்டும்” எனக் கூறிய அவர், “மற்றவர்கள் எம்மைக் கட்டுப்படுத்த நாம் அனுமதிக்க முடியாது” எனவும் தெரிவித்தார்.

Related posts

சந்திரனைச் சுற்றவுள்ள முதல் கனடியர் Jeremy Hansen

Lankathas Pathmanathan

ஈரான் பதற்றத்தை அதிகரிக்க விரும்புகிறது: கனடாவுக்கான ஐ.நா. தூதர் Bob Rae

Lankathas Pathmanathan

நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் NPDயின் முடிவு குறித்து ஆச்சரியம்

Lankathas Pathmanathan

Leave a Comment