September 9, 2026
தேசியம்
செய்திகள்

Liberal தலைவர் போட்டியில் இருந்து மற்றுமொருவர் தகுதி நீக்கம்!

Liberal கட்சியின் புதிய தலைவருக்கான போட்டியில் இருந்து மற்றுமொருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.

இந்த போட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை (21) வரை  ஐந்து வேட்பாளர்கள் காலத்தில் இருந்தனர் .

இவர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Ruby Dhalla தலைமைத்துவ வாக்கெடுப்பு குழுவால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த தகுதி நீக்கத்தை தொடர்ந்து தலைமை போட்டியில் முன்னாள் கனடிய மத்திய வங்கி, இங்கிலாந்து மத்திய வங்கியின் ஆளுநர் Mark Carney, முன்னாள் நிதியமைச்சரும் துணைப் பிரதமருமான Chrystia Freeland, முன்னாள் அரசாங்க சபை தலைவர் Karina Gould, Québec மாகாணத்தின் Pierrefonds-Dollard தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Frank Baylis, ஆகியோர் உள்ளனர்.

March 9 ஆம் திகதி பிரதமர் Justin Trudeauவுக்கு பதிலாக Liberal கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க  இரண்டு வாரங்கள் மாத்திரம் உள்ளன.

Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் நிலை உள்ளது.

Related posts

தேசிய நினைவு தின நிகழ்வுகளில் போரில் இறந்தவர்களை கனடியர்கள் நினைவு கூர்ந்தனர்

Lankathas Pathmanathan

தமிழின அழிப்பு நினைவகம் அமைப்பதற்கான தீர்மானம் Toronto நகர சபையில் நிறைவேற்றப்பட்டது!

Lankathas Pathmanathan

லிபியாவிற்கு $5 மில்லியன் மனிதாபிமான உதவியை அறிவித்த கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment